இந்தியாவிலேயே இப்படி செய்வது மு.க.ஸ்டாலின் மட்டும் தான்! ஈபிஎஸ் சாடல்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துபவர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் - எடப்பாடி கே.பழனிசாமி  

Written by - RK Spark | Last Updated : Aug 9, 2022, 01:03 PM IST
  • தருமபுரியில் கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் பழனிசாமி.
  • திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • ஆன்லைன் சூதாட்டத்ட்டை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே இப்படி செய்வது மு.க.ஸ்டாலின் மட்டும் தான்! ஈபிஎஸ் சாடல்! title=

ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துபவர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் என தருமபுரியில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியுள்ளார்.  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்திற்க்கு இன்று வருகை புரிந்தார். அப்போது கட்சி அலுவலகம் அருகேயுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

இதற்கு முன்னதாக மக்களை சந்தித்து பேசிய அவர், மக்களின் அருளாசிகளோடு உயர்ந்த பதவியான இடைக்கால செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருபோதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க முடியாது இது வலிமையான இயக்கம், பலமான இயக்கம் எனவும் பேசினார். ஸ்டாலின் அரசு அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுகின்றன, வழக்கின் மூலமாக கட்சியை கெடுக்க நினைத்தால் திமுக கட்சி இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இருந்த சில துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளனர் என சாடினார். தர்மபுரி மாவட்ட மக்கள் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் நீரேற்றும் திட்டதை நிரைவேற்ற அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது, ஆனால் இந்த திட்டத்தை திமுக செயல்படுத்த முன்வரவில்லை. 

மேலும் படிக்க | ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் - அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களையும் விவசாயிகளையும் இந்த திமுக விடியா அரசு வஞ்சித்து வருவதாகவும், தனக்கு வருமானம், தன் குடும்பம் பிளைக்கவேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம். அதேபோல தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் இந்த ஆட்சியில் கிடைக்கிறது, ஆன்லைன் சூதாட்டத்தை கண்டிப்பாக தமிழகத்தில் ஒழிக்கவேண்டும், ஆனால் ஆன்-லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்தை விட்டுவிட்டு கருத்து கேட்பு கூட்டம் நடுத்துகிறார் ஸ்டாலின். ஆன்லைன் சூதாட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பது என்பது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு - மோசடியாளரான நகைக்கடை மேலாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News