அபராதத்திலிருந்துதான் விலக்கு முகக்கவசத்திலிருந்து இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

முகக்கவசம் அணியாவிட்டால் வசூலிக்கப்படும் அபராதத்திலிருந்துதான் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 01:58 PM IST
  • அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
  • முகக்கவசம் கட்டாயம்
  • முகக்கவசம் அணிய அமைச்சர் வலியுறுத்தல்
அபராதத்திலிருந்துதான் விலக்கு முகக்கவசத்திலிருந்து இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் title=

சென்னை: சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதிதாய் கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், “டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். 

Mask

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே அரசு விலக்களித்துள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறையிலிருந்து விலக்களிக்கவில்லை.

மேலும் படிக்க | அதிகரிக்கும் கொரோனா... மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மாவட்டந்தோறும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்" என்றார்.

செய்தியாளர்கள் மத்தியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, 

நிதி நெருக்கடியான சுழலில் ஓய்வு அறையை அமைச்சர் கட்டி கொடுத்துள்ளார் என்றும் திமுக அரசு பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்து மாபெரும் புரட்சியை செய்துள்ளது என்றும் புகழ்ந்து பேசினார்.

மேலும் பேருந்துகளில் பெண்கள் களுக்கான இலவச பயனம்  அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வழி வகுத்துள்ளது எனவும், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் அறிவித்த நாள் முதல்  தற்போது வரை பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வது 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தில்லியில் எகிறும் தொற்று பாதிப்பு; துணை நிலை ஆளுநர் தலைமையில் முக்கிய கூட்டம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News