சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்க பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது..!
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீடு செய்யாததால், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்தது. ஊரடங்கு தளர்விற்குப் பின் மொத்த யூனிட்டுகளை கூட்டி கட்டணம் நிர்ணயித்த மின்வாரியம், ஊரடங்கின் போது செலுத்திய தொகையை மட்டும் கழித்தது.
குறிப்பிட்ட யூனிட்டுகளை தாண்டும் போது கட்டணமும் அதற்கேற்ப நிர்ணயம் செய்யப்படும் என்பதால், பெரும்பாலானோருக்கு 500 யூனிட்டுகளை தாண்டி கட்டணம் ஏறியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தேசிய மக்கள் கட்சி தலைவர் LL.ரவி, முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி பில்லாகவும், மீத யூனிட்டுகளை அடுத்த 2 மாதங்களுக்கான பில்லாகவும் நிர்ணயிக்க வேண்டுமென கோரினார். ஊரடங்கில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாகி இருக்கும் எனவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் இல்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது.
READ | உங்களிடம் ஆதார் அட்டை இல்லையா? சில நிமிடங்களில் நீங்களே E-Aadhaar பதிவிறக்கம் செய்யலாம்
இந்நிலையில், இருதரப்பு வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக அரசு தரப்பு அளித்த விளக்கத்தைஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டனர்.மேலும், தனிப்பட்ட நபர்களுக்கு பிரச்னை இருந்தால் அரசை அணுகி தீர்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினர்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது.... "ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மின்உற்பத்தி, பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இணைய தளம் வாயிலாகவும் மின் கட்டணத்தை செலுத்தலாம்" எனவும் அறிவுறுத்தியுள்ளது.