கடலில் மாயமான மீனவர்கள்: தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை

Fishermen Missing: திருச்செந்தூர் அருகே கடலில் மாயமான மீனவர்கள். மாயமான 2 மீனவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை  எடுக்க கோரிக்கை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2022, 02:31 PM IST
  • திருச்செந்தூர் அருகே கடலில் மாயமான 2 மீனவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
  • மீனவர்கள் தினமும் நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடலில் மாயமான மீனவர்கள்: தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை title=

திருச்செந்தூர் அருகே கடலில் மாயமான 2 மீனவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை  எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மீனவ மக்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீனவர் கிராமமான அமலிநகர் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் தினமும் நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது. 

அதேபோல் மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் நேற்று மீன்பிடி தொழிலுக்கு சென்ற படகுகள் கரைக்கு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (32), பிரசாத் (40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த காற்றின் காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதில் பால்ராஜ், மற்றும் நித்தியானந்தம் ஆகிய இருவர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். 

Tamil Nadu: Fishermen Go Missing Bear Thiruchendur in Ocean

மேலும் படிக்க | நாளை விடுப்பு எடுக்கக் கூடாது - ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த தகவல் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் கடலில் வீசிய சூறாவளியைக்கூட பொருட்படுத்தாமல் உயிரைத் துச்சமென கருதி கடலில் காணால் போன சக மீனவர்களை கரையிலிருந்து படகுகளில் புறப்பட்டு  தேடியுள்ளார்கள்.  

ஆனால் வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தினால் தேடுதலில் எந்த பலனும் கிடைக்காத காரணத்தால் மாலையில் கரைக்கு திரும்பிவிட்டார்கள். கடலில் காணாமல் போன மீனவர்களை தேட கடலோரகாவல் படை மற்றும் கடற்படை ரோந்து கப்பல்களையும், விமானங்களையும் அனுப்பி தேடுதல் பணி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம் கோரிக்கை  விடுத்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட  மீனவ கிராம பகுதிக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர்செந்தில்ராஜ் பாதிக்கப்பட்ட மீனவ மக்களிடம் இதுகுறித்து  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது கடலில் மாயமான மீனவர்கள் குறித்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அவர், மீனவர்களை கண்டுபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வூர் பொது மக்களிடம் எடுத்துரைத்து விளக்கினார்.

மேலும் மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் வருகை தர வேண்டும் என்றும் பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News