தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் முடிவுக்கு வருகிறது.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்துவிட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல உற்சாகமாகத் தயாராகிவருகின்றனர்.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை, கடந்த ஆண்டு மத்திய அரசு 60 நாளாக உயர்த்தியது.
அதன்படி ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.