அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்!

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது!!

Last Updated : Nov 7, 2019, 03:38 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்! title=

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது!!

வங்க கடலில், புல் புல் புயல் உருவாகியிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், மத்திய வங்க கடல் பகுதிக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: " நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. 

இதற்க்கு, புல்புல் என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக்கூடும். தமிழக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்  என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் நவம்பர் 8 முதல் 1 0ஆம் தேதி வரை வெப்பச்சலம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக திருப்பூரில் 5 செ.மீ மழையும், சிவகங்கையில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.  

 

Trending News