அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2021, 12:31 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார் title=

ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு கே வெங்கடாசலம். கடந்த 2011 ஆம் ஆண்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் பெருந்துறையில் போட்டியிட்டு வென்றார். இதனால் இவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.

பின்னர் 2016 ஆம் ஆண்டும் அதே பெருந்துறை பகுதியில் போட்டியிட்டு தோப்பு வெங்கடாசலம் (Thoppu ND Venkatachalam) மீண்டும் வென்றார். ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோப்பு கே வெங்கடாசலம் தொடர்ந்து ஓரங்கப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்த போது தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவையில் தோப்புக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 

ALSO READ | விரைவில் குடும்ப தலைவிக்கு ஊக்கத்தொகை - அதிகரிக்கும் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள்

இதற்கிடையில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப நனு தாக்கல் செய்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையொட்டி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார். இதனால் அதிமுக (AIADMK) கட்சி மீது கடும் கோபமடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிமுக நிர்வாகிகள் உள்பட 900 பேருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

ALSO READ | ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை செய்ய முடியாது -உயர் நீதிமன்ற மதுரை கிளை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News