ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை செய்ய முடியாது -உயர் நீதிமன்ற மதுரை கிளை

மத்திய அரசை ஒன்றிய அரசு என்பதை தடை செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துவிட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 1, 2021, 03:29 PM IST
  • ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை செய்ய முடியாது
  • மதுரை உயர் நீதிமன்ற கிளை அறிவிப்பு
  • மத்திய அரசு என்றே அழைக்க வேண்டும் என்ற வழக்கில் நீதிமன்றம் கருத்து
ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை செய்ய முடியாது -உயர் நீதிமன்ற மதுரை கிளை  title=

ஒன்றிய அரசு என்ற வார்த்தையை திமுகவினர் பயன்படுத்துவது தவறு என்று பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக, திமுகவினர் ஒன்றிய அரசு என்று சொல்வது தவறு, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் ஆட்சேபங்களை எழுப்பினர். 

இதற்கு தமிழக முதலமைச்சர் விளக்கமும் அளித்தார். ஆனால், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினால், மாநில அரசை ஊராட்சி அரசு என்று அழைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக போடப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் சட்ட அமர்வு விசாரித்தது.

எந்த வார்த்தையை பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்தக்கூடாது என்று அரசுக்கு அறிவுறுத்தமுடியாது என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துவிட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம், 'இந்தியா என்கிற பாரதம் பல மாநிலங்கள் ஒன்றடங்கிய, நாடாக இருக்கும்' என்று, தெளிவாக குறிப்பிடுகிறது. மாநிலங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில், இந்தியா இணையவில்லை.

Also Read | Jai Hind முழக்கம்; தமிழக அரசை முடக்கும் காங்கிரஸ் & BJP

எனினும், இந்தியா கூட்டாட்சி முறையிலான நாடாக இருக்க முடிவெடுத்தது என்பதை, அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு தெளிவுப்படுத்துகிறது என்று பாஜகவினர் ஒன்றியம் என்ற வார்த்தைக்கு எதிராக தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைதான் இந்த விவகாரத்தை முதலில் சமூக ஊடகங்களில் (social media) கவனத்திற்குக் கொண்டுவந்தார். மத்திய அரசு என்பதற்கு பதிலாக "ஒன்றிய அரசு" (union government) என்ற வார்த்தையை தமிழக அரசு பயன்படுத்துவதை அவர் கண்டித்தார்.

2006-11 க்கு இடையில் அவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தது. அப்போது இந்த வார்த்தையை பயன்படுத்தாத அரசு, இப்போது இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Also Read | மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News