ஒரே நாளில் அதிரடியாய் குறைந்த தங்க விலை.... சவரனுக்கு ₹.400 குறைவு...!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 400 ரூபாய் குறைந்துள்ளது!!

Last Updated : Mar 11, 2020, 04:47 PM IST
ஒரே நாளில் அதிரடியாய் குறைந்த தங்க விலை.... சவரனுக்கு ₹.400 குறைவு...!  title=

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 400 ரூபாய் குறைந்துள்ளது!!

சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 214 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 50 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 164 ரூபாயாக உள்ளது. நேற்று 33 ஆயிரத்து 712 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 400 ரூபாய் சரிந்து 33 ஆயிரத்து 312 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி நேற்று 50 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த நிலையில், அதன் விலை இன்று 800 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.

மார்ச் மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்ததால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் சற்று ஆறுதலாக இன்று விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 11) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,184 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,214 ரூபாயாக இருந்தது. இன்று சவரனுக்கு 400 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 33,712 ரூபாயிலிருந்து இன்று 33,472 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் சரிந்து, ரூ.4,393க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தில் 4,425 ரூபாய்க்கு விற்பனையானது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை 35,400 ரூபாயிலிருந்து இன்று 35,144 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. தூய தங்கத்தின் விலை 256 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

 

Trending News