சென்னை: இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், "நியாயவிலைக்கடைகள், குடும்ப அட்டைகள் வழங்குதல், உணவுப் பொருட்கள் விநியோகம், உணவுப்பொருட்கள், நிவாரணத் தொகை உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கால தாமதமின்றி புதிய ரேஷன் அட்டைகளை கொடுக்க வேண்டும் எனவும், நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், எடைக்குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ALSO READ | TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!
கோவிட் பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடன் உதவி கோரும் தகுதியானவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் .அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருட்டிணன், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், இ.ஆ.ப, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறை கூடுதல் இயக்குநர் அபாஷ்குமார், இ.கா.ப., உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் டாக்டர் ஆர். ஆனந்த்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் வி. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ. சிவஞானம், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ. சண்முகசுந்தரம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ALSO READ | முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்கு 5 பேர் கொண்ட குழு அமைப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR