‘எதிர்காலத்திற்காக ஒரு பின்னோக்கிய பயணம்’ என்ற தலைப்பில் மாணவர்களிடம் சுந்தர் பிச்சை உரையாற்றினார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சென்னையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை தான் படித்த ஐஐடி காரக்பூரில் நடைபெற்ற கல்லூரி விழாவில்
அப்போது சுந்தர் பிச்சை கூறியதாவது:
கல்லூரியில் ஆரம்ப காலத்தில் எனக்கு இந்தி தெரியாது கொஞ்சம் கொஞ்சம் இந்தி பேசுவேன். ஏனேன்றால் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்தவன்.பலமுறை தோல்வி அடைந்தாலும் உயர்வான லட்சியம் வேண்டும். கல்லூரி படிப்பு முக்கியம். அதுவே எல்லாம் இடத்திலும் பயன்படாது. மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கல்லூரியில் படிக்கும் பொழுது விளையாட்டு, காதல் ,குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவது, போன்ற தன்னுடைய நினைவலைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சுந்தர் பிச்சை பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.
2004-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.