அரசு பேருந்து விபத்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அரசு பேருந்து விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம். நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2022, 01:23 PM IST
  • அரசு பேருந்து விபத்து ஆனதும் ஊர் மக்கள் உதவி செய்தனர்.
  • காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
  • விபத்து எப்படி நடந்தது என காவல்துறையினர் விசாரணை.
அரசு பேருந்து விபத்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் title=

திருவாரூர்: அரசு பேருந்து நிலை தடுமாறி மரத்தின் மோதி விபத்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நன்னிலம் டு குடவாசல் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து குடவாசலில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நன்னிலம் நோக்கி சென்றுக்கொண்டு இருந்தது. அப்போது நன்னிலம் அருகே உள்ள சலிப்பேர் என்ற இடத்தில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த சிறியவர்கள், பெண்கள் முதியவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக் குறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து படுமோஷமாக நொறுங்கியது.

மேலும் படிக்க: 'யாருப்பா நீ': கார் பைக் பயங்கர விபத்தில் சிக்கி அசால்டாய் நடந்துபோன நபர்: வைரல் வீடியோ

மேலும் படிக்க: ஓடும் ரயிலின் கீழ் சிக்கிய பயணி; துரிதமாக செயல்பட்ட காவலர்

மேலும் படிக்க: திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி

மேலும் படிக்க: மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய கணவன்... துடிதுடித்த மனைவி!

மேலும் படிக்க: காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News