தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை(Chennai meteorological center) வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2021, 01:15 PM IST
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் title=

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை (Chennai meteorological center) வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நன்கு பலத்த மழை குளிர்ச்சியான சூழலே நிலவி வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 18 மாவட்டங்களில், மொத்தம் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை (Chennai meteorological center) வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ALSO READ | மழை வருமா? வராதா?... என்ன சொல்லுது வானிலை ஆய்வு மையம்..!

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது., தமிழ்நாடு கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யகூடும். மற்ற ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 27ம் தேதி வரை மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ | அச்சம் வேண்டாம்; Red_Alert எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News