விநாயகர் சிலைகளுக்கு கட்டுபாடு: உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்வதற்கும் கரைப்பதற்கும் தடை விதிக்க கோரி வழக்கில், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி சிலைகள் செய்யப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுபிபயுள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 30, 2023, 05:01 PM IST
  • களிமண்ணில் விநாயகர் செய்யக்கோரி மனு
  • ரசாயன விநாயகர் செய்வதை அரசு கண்காணிக்கிறதா?
  • தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசுக்கு கேள்வி
விநாயகர் சிலைகளுக்கு கட்டுபாடு: உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு title=

மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் செய்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பிளாஸ்டா ஆப் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் இவை ஆறு, குளம், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. ஆனால் அவை கரைவதில்லை . இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. இது உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. 

மேலும் படிக்க | டிடிவி, ஓபிஎஸ்க்கு குட்பை..! இபிஎஸ்-க்கு ஹலோ..! சசிகலாவின் மாஸ்டர் பிளான்!

குறிப்பாக, பிளாஸ்டா ஆப் பாரிஸ் பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை. ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்ய அனுமதி இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனவே மதுரையில் களிமண் சிலைகளையே செய்ய அனுமதி அளித்து அதனை ஆறு, குளத்தில் கரைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா நீதிபதி குமரப்பன் அமர்வில் விசரானைக்கு வந்தது. 

அப்போது விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்தி செய்யக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு உள்ள நிலையில், எவ்வாறு பிளாஸ்டா ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், விநாயகர் சிலையை செய்வதற்கு பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கு நாளை விசாரணைக்காக ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News