விதவை உதவித்தொகை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம்

தமிழ்நாடு அரசு விதவை உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகைகளை அதிகரிக்க முடிவு செய்திருக்கும் நிலையில், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2023, 01:20 PM IST
  • விதவை உதவித் தொகை உயர்வு
  • தமிழக அரசு எடுத்த முடிவு
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விதவை உதவித்தொகை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம்  title=

தமிழ்நாடு அரசு விதவைப் பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது. இந்த உதவித் தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் தகுதியானவர்கள்? விண்ணபிக்க தேவையான ஆணவங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

விதவை உதவித் தொகை திட்டம்

தமிழ்நாடு அரசின் DESTITUDE WIDOW PENSION SCHEME என்ற திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைப் பெண்கள் உதவித் தொகை பெறலாம்.

தகுதிகள் 

- ஆதரவற்ற பெண்கள்
- கணவனால் கைவிடப்பட்ட விதவைகள்
- உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இருக்கும் பெண்களுக்கு 20 வயதிற்கு மேல் ஆண் மகன்கள் இருக்கக் கூடாது.
- அவர்களுக்கென சொந்தமாக வீடு அல்லது நிலங்கள் இருக்கக் கூடாது.

மேலும் படிக்க | விதவை மற்றும் முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு - தமிழ்நாடு அரசு அதிரடி!

உதவித் தொகை எவ்வளவு

இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், இந்த தொகையை வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாமல் அருகிலுள்ள போஸ் ஆபிஸ் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

ஆவணங்கள் 

- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- கணவரின் இறப்பு சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass Book)
- Self-Declaration Form
- Aadhar Consent Form

விதவை உதவித் தொகை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த விதவை உதவித் தொகை திட்டத்தை பெற விரும்பும் பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, tnega என்ற இணையதள போர்ட்டலுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். நேரிடையாக விண்ணப்பிக்க முடியாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

- முதலில் tnega என்ற வெப்சைட்டு செல்லவும்.

- அவற்றில் “Citizen Login” என்பதை க்ளிக் செய்யவும்.

- புதிதாக Account ஓபன் செய்யவும். அதில் new user? sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து Login செய்யவும்.

- லாகின் செய்த பிறகு Revenue Department என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் நிறைய திட்டங்கள் இருக்கும். நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது Destitute Widow Pension scheme என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

- இப்போது Register can என்பதை க்ளிக் செய்யவும்.

- அவற்றில் Document Type-ல் திரு/ திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.

- அந்த OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவேண்டும். இப்போது can நம்பர்/ ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வந்துவிடும். அவற்றை க்ளிக் செய்யவேண்டும்.

- அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும். அவற்றை கொடுத்து Confirm OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது படிவமானது ஓபன் ஆகும்.

- அடுத்து mode of disbursement என்பதில் bank / postal மூலம் தேர்வு செய்யவும். அதன் பிறகு bank details என்பதில் சரியானவற்றை கொடுக்க வேண்டும். படிவத்தில் கேட்டுள்ள இதர விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும். மேலும் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை விவரத்தினை சரியாக கொடுக்க வேண்டும்.

- அதன் பிறகு Property Details என்பதில் select ஆப்ஷனில் விண்ணப்பதாரர் பெயரை செலக்ட் செய்து கொள்ளவும். அவற்றில் கேட்டுள்ள விவரங்களுக்கு சரியானவற்றை நிரப்ப வேண்டும். சரியானவற்றை படிவத்தில் நிரப்பிய பிறகு submit ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

- அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யவும். உங்களுடைய புகைப்படம் (Photo) 50 KB அளவுடனும், மீதமுள்ள அனைத்து ஆவணங்களும் 200 KB என்ற அளவுடன் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். Scan செய்து வைத்துள்ளதை படிவத்தில் Upload செய்யவும்.

- அடுத்து Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும். படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.

- Aadhar Consent Form-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இல்லையெனில்  இ-சேவை மையம் மூலம் பயன்படுத்தி கையெழுத்து இடவும். இந்த படிவத்தினை upload செய்யவும். அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அவற்றில் service charges என்பதில் ரூ.10/- இருக்கும். 

- I agree என்ற கட்டத்தில் டிக் செய்த பிறகு make paymentஐ கொடுக்க வேண்டும். பின்னர், ஆன்லைன் மூலம் பணத்தினை  செலுத்த வேண்டும்.

- பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய status-ஐ உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News