மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது: MK.ஸ்டாலின்

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Nov 13, 2019, 04:40 PM IST
மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது: MK.ஸ்டாலின் title=

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார் ,யுவராஜ் உட்பட 5 தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டியை, இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த ரஞ்சித் குமார் என்பவரை விஷவாயு தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற உள்ளே இறங்கிய அருண்குமார், தம்பியை காப்பாற்றி அவர் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில்; ‘கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு. இதில், தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை!. 

நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News