இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? சீமான் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டுத் தமிழை இழிவுபடுத்தி, தமிழர்களை அவமதிக்கும் இழிசெயலாகும் என்று சீமான் கூறியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 06:26 PM IST
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? சீமான் கண்டனம்  title=

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்,  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படாமல், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, தமிழ்த்தாயை அவமதிப்பது போன்றது என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

'சென்னையிலுள்ள (Chennai) இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டுத் தமிழை இழிவுபடுத்தி, தமிழர்களை அவமதிக்கும் இழிசெயலாகும். 

‘தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன்! தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடேன்!’ எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் சீற்ற மொழிக்கேற்ப இத்தகைய அவமதிப்புச் செயல்களில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிர்வாகம் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

ALSO READ:ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம் 

தமிழ்நாட்டில் நிலைபெற்றுள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனம் தாய்த்தமிழ் மொழியைப் புறக்கணிப்பது குறித்து எவ்விதக் கண்டனமும் தெரிவிக்காமல், உரிய விளக்கமும் கேட்காமல் திமுக அரசு (DMK Government) அமைதி காப்பது வெட்கக்கேடானது. 

ஆகவே, ‘தமிழிய முதல்வர்’, ‘தமிழ்த்தேசிய முதல்வர்’ எனத் தங்களுக்குத் தாங்களே பட்டங்களைச் சூட்டி, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து உடனடியாக இதனைச் சரிசெய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.' என்று சீமான் (Seeman) அறிக்கையில் கூறியுள்ளார்.

ALSO READ:பாரபட்சமின்றி நேர்மையாக செயல்படுவேன்: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News