சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளுர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை என எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாளை வானிலை எப்படி இருக்கும்:
நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என பத்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | மழையை துல்லியமாக கணக்கிட உதவும் புதிய தொழில்நுட்பம்!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கனமழை:
ஹைதராபாத் நகர மேயர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விதித்துள்ளார். அதாவது இன்றும் கனமழை தொடரும் எனக்கூறியுள்ளார். தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் நேற்று கனமழை பெய்தது. சாலை முழுவதும் நீர் தேங்கியுள்ளது.
தீவிர மழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் சிறிது நேரத்தில் வெள்ளம் சூழ்ந்தது. மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது மற்றும் குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடைகள் மற்றும் உணவகங்களில் நீரில் மூழ்கிய படங்கள் வெளியாகியுள்ளது
ALSO READ | தமிழகத்தில் 5 நாட்களுக்கு அதிகன மழை: வானிலை ஆய்வு மையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR