தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தி தேர்வுசெய்கிறது. மே மாதம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த தேர்வு மூலம் உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5,143 காலிப் பணியிடங்களுக்குத் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னையில் TNPSC குரூப் 2 இலவசப் பயிற்சி: அம்பேத்கர் கல்வி மையம் அழைப்பு
மே 21 ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதல் நிலை தேர்வு முடிவுகள் வந்த பின்னர் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என கூறியுள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்பம் தொடங்கியிருப்பதால், விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களில் யாரேனும் தவறாக விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு செய்திருந்தால் மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ள முடியும். இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. விண்ணப்ப திருத்தம் செய்பவர்கள் மீண்டும் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை. முதலில் நிரந்தப் பதிவில் திருத்தம் செய்து, பின்னர் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கூடுதல் சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கும் அழைத்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | TNPSC -க்கு தேர்வர்கள் வேண்டுகோள் - காலவகாசத்தை நீடிக்க கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR