இரவு முழுவதும் மகனை தேடிய பெற்றோருக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மகன் இறந்தது தெரியாமல் இரவு முழுவதும் தேடிய பெற்றோருக்கு காலையில் அதிர்ச்சி காத்திருந்தது. 

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : May 28, 2022, 03:37 PM IST
  • இரவு முழுவதும் தேடியும் மகனை கைணவில்லை.
  • மின் இணைப்பு பைப்பை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு.
  • சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு முழுவதும் மகனை தேடிய பெற்றோருக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி title=

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

அவரது 11வயது உடைய இளையமகன் சுஹேப், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் சுஹேப் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அமானுல்லா மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் சிறுவன் சுஹேப்பை தேடியுள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் சிறுவன் சுஹேப் கிடைக்காததால் தந்தை அமானுல்லா தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சியாலி தெருவில் உள்ள சிறுவனின் பாட்டி விட்டு மொட்டை மாடியில் சிறுவன் ஒருவர் மின்கம்பி அருகே விழுந்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO

பின்னர் அப்பகுதி மக்கள் அமனுல்லா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சிறுவனின் பெற்றோர் அங்கே சென்று பார்த்த போது சிறுவன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

மேலும் சிறுவன் தனது பாட்டியின் புதிதாக கட்டப்பட்டு வரும் விட்டின் மேல்தளத்தில் விளையாடும் போது மின் இணைப்பு  பைப்பை தொட்டதால் அவருக்கு மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராமிய போலீஸார் மின்சாரத்தைத் துண்டித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் உயிரிழந்தது குறித்து தெரியாமல் இரவு முழுவதும் பெற்றோர் அவனை தேடி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கிரேக்க எண்ணெய் கப்பல்களை கைப்பற்றி பதிலடி கொடுத்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News