நமக்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 14 கோடியே 54 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது!!
நாமக்கல்லை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் பெரியசாமியின் கட்டுமான நிறுவனம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 14 கோடியே 54 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் அரசின் கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பிஎஸ்கே கட்டுமான குழுமத்தின் நிறுவனர் பெரியசாமியின் வீடு, அவரது சகோதரர் மற்றும் மகன்களின் வீடு, நிறுவனமென சென்னையில் 3 இடங்களிலும், நாமக்கலில் 4 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் பைகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியுள்ளது. பிஎஸ்கே கட்டுமான அலுவலகத்தில் மட்டும் 13 கோடியே 80 லட்சமும், மற்ற இடங்களில் 74 லட்சம் என மொத்தம் 14 கோடியே 54 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Income Tax Dept has seized unaccounted cash worth Rs 14.54 crore from four premises of PSK Engineering Construction Company in Namakkal. #TamilNadu pic.twitter.com/Eq8A2yA9hZ
— ANI (@ANI) April 13, 2019
இதையடுத்து கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.