அரசு வேலையை விட சுயதொழில் தொடங்குங்கள் இளைஞர்களுக்கு J'குமார் அட்வைஸ்!

அரசு வேலையை எதிர்பார்த்ததற்குப் பதிலாக இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

Updated: Sep 30, 2019, 09:07 AM IST
அரசு வேலையை விட சுயதொழில் தொடங்குங்கள் இளைஞர்களுக்கு J'குமார் அட்வைஸ்!

அரசு வேலையை எதிர்பார்த்ததற்குப் பதிலாக இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

முன்னாள் மேயர் சிவராஜின் 128வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "படித்த இளைஞர்கள், அரைக்காசு வேலையாக இருந்தாலும் அரசு வேலையாக இருக்க வேண்டும் என படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அரசு வேலையை எதிர்பார்த்திருப்பதற்கு பதிலாக அவர்கள் சுயதொழில் தொடங்க முன்வரவேண்டும்.

மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், இளைஞர்கள் தான் கற்ற கல்வியின் அடிப்படையில் சுய தொழில் தொடங்கவும் முன்வரவேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.