சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐடி நிறுவன ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 5000-ம் பேருக்கு மேற்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு காட்டி வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை வளாகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதில் சுமார் 5000-ம் பேருக்கு மேற்பட்டோர் ஐ.டி. ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.