ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெரினா மற்றும் மதுரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அவர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை போராட்டக்களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகையில்; எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாட போவதாகவும் இது மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் தமிழர்கள் மாபெரும் புரட்சியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசு விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டத்தை ஓப்புதலுக்காக அனுப்பியது.
இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளூநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசர சட்டத்திற்கு ஓப்புதல் அளித்தார். இதனையடுத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு மதுரைக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.மூன்று ஆண்டிகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் மதுரை விழாகோளம் பூண்டுள்ளது.