அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மோட்டர் சாதனங்களை திருடிய போதை ஆசாமிகள்!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில், போதை ஆசாமிகள் பூட்டை உடைத்து மோட்டர் வாகன சாதனங்களை திருடியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 29, 2024, 05:50 PM IST
  • அரசினர் பள்ளியில் கைவரிசை
  • போதை ஆசாமிகள் செய்த செயல்
  • போலீஸார் விசாரணை
அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மோட்டர் சாதனங்களை திருடிய போதை ஆசாமிகள்! title=

சென்னை புளியந்தோப்பில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பூட்டை உடைத்து தண்ணீர் மோட்டார் ஆய்வக சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி அருகில் இருக்கும் போதை ஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர். 

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 77 வது வார்டில் உள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் படிக்கும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென புகுந்த போதை ஆசாமிகள் பள்ளியின் இரண்டாவது தளத்தில் உள்ள ஆய்வகத்தில் புகுந்து நான்கு பேட்டரிகள் மைக் ஆய்வகப் பொருட்கள் மற்றும் தண்ணீர் இரைக்கும் மின்மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். நேற்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் அண்ணாதுரை பேசின்பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | 265 மேஜைகள்... 321 சுற்றுகள்... சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் விபரம்..!!

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் நரி என்ற நரேந்திரன் கார்கோ சஞ்சய் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர் குறிப்பாக இந்த பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை மேலும் பள்ளியின் பின்புறம் உள்ள தடுப்பு சுவர் உடைக்கப்பட்டு அந்த வழியாக போதை கும்பல் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடி செய்த ‘அமெரிக்கா மாப்பிள்ளை’ கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News