தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளை போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்க்கு எதிராக குரல் கொடுக்க நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என இயக்குனர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
நேற்று முன்தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் கடந்த மூன்று நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கபடாமல் இருந்தது. அந்த வகையில் மூன்று நாள்களுக்கு பின் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பா.ரஞ்சித் தகவல் ஒன்றை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில்,
வாருங்கள் நண்பர்களே!!!நம் காலத்தின் கொடூர நிகழ்வை ஒன்றிணைந்து எதிர்ப்போம்.
வாருங்கள் நண்பர்களே!!!நம் காலத்தின் கொடூர நிகழ்வை ஒன்றிணைந்து எதிர்ப்போம்..#தமிழ்நாடு_கலைஇலக்கிய_ஊடகசெயற்பாட்டாளர்கள்_கூட்டமைப்பு #BanSterilte pic.twitter.com/NJwNAfwytU
— pa.ranjith (@beemji) May 25, 2018
என பகிர்ந்து நாளை அனைவரும் எதிர்ப்பு காட்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வரவேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.