நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா

Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா.... அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2022, 12:57 PM IST
  • திருச்சி சிவாவின் மகனுக்கு நித்தியானந்தா அளித்த விருது
  • சூர்யா சிவாவின் பெருமைமிகு டிவிட்டர் பதிவு
  • கைலாசாவின் தர்ம ரட்சகர் விருது பெற்ற பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா சிவா
நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா title=

Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா.... அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா. இந்த விஷயத்தை, அவரே தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். இந்த டிவிட்டர் பதிவு, சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழு வடிவமாக இருக்கிறார். இந்தியாவில் அவர் மீது பல பாலியல் புகார்களும், பல்வேறு சர்ச்சைகளும் இருக்க, அவர் தனக்கென்று கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று உருவாக்கி உள்ளார்.

தனது நாட்டுக்கு தொழில் தொடங்க வருபவர்களுக்கான் விசா இலவசம் என்று அறிவித்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் பலர் இருக்கின்றனர். அங்கிருந்து புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. தற்போது அவர் விருதுகள் வழங்கி அனைவருக்கும் சங்கடங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க | காசு என்னுது இடம் உன்னுது - இலங்கைக்கு தூது விட்ட நித்தியானந்தா

ஆனால் விருது பெற்றவர் அதனை மகிழ்ச்சியாக தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த விருது விவகாரம், ஏற்கனவே மகனுடன் மனத்தாங்கலில் இருக்கும் திருச்சி சிவாவுக்கு மேலும் பல சங்கடங்களை ஏற்படுத்தும். நித்தியானந்தாவின் விருதால் மகிழ்ந்து, அதை பெருமையாய் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார் மகன் சூர்யா என்றால், தர்மரட்சகர் விருது பெற்ற மகனால் அப்பா திருச்சி சிவாவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டிசிஎஸ்ஸில் வேலை வேண்டுமா? இதோ விவரமான வழிமுறைகள்

பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் சிவ சூர்யாவுக்கு, கைலாசாவின் தர்ம ரட்சகர் விருது வழங்கப்பட்டதை, தனது பதிவில் சூர்யா தெரிவித்துள்ளார். அந்த பதிவுடன் பகிரப்பட்டுள்ள வீடியோவில், இந்த விருது வழங்கும் விழாவும், திருச்சி சூர்யா சிவாவின் விருது ஏற்புரையும் இடம் பெற்றுள்ளது. தான் திருவண்ணாமலையாரின் பக்தர் என்றும் அவர் இந்த விருது ஏற்பு உரையில் தெரிவித்துள்ளார்.  

விஜயதசமியன்று, அதாவது நேற்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் துவக்கத்தில் நித்தியானந்தா திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு விருதை அறிவிக்கிறார். அதையடுத்து ஆங்கிலத்தில் இந்த விருது  குறித்த அறிவிப்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகிறது.

மேலும் படிக்க | கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News