Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா?

Vijay Participating In Kalaingar 100 Event : திரைத்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 6, 2024, 05:09 PM IST
  • விஜய் கலைஞர் 100 விழாவிற்கு வருவாரா?
  • திரையுலகினர் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • சமூக வலைதளங்களில் விஜய் ட்ரெண்டாகி வருகிறார்.
Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா?  title=

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, இன்று (ஜனவரி 6) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள திரையுலகினருக்கும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விஜய் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா..

முத்தமிழ் அறிஞரும், மூத்த கலைஞருமான கருணானிதிக்கு கடந்த ஆண்டே நூற்றாண்டு விழா நடைபெற இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இந்த விழா ஒத்திப்போனது. சேப்பாக்கத்தில் இந்த விழாவை நடத்த இருந்த திமுகவினர், பின்பு இதற்கான இடத்தை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானமாக மாற்றினர். கடந்த ஒரு வார காலமாக, இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைப்பெற்று வந்தது. பெப்சி தொழிலாளர்கள் பலர் இந்த விழாவிற்காக பணியாற்றி உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

விஜய்க்கு அழைப்பு..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களுக்கும், பல்வேறு ஹீரோக்களுக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கும் முறையாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் இந்த விழாவில் பங்கேற்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. இத்தனைக்கும், இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழ் படங்களின் எந்த ஷூட்டிங்கும் நடைபெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | அடிச்சு தூக்கப்போகும் மழை... 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட், 12 மாவட்டங்களில் கனமழை!

விஜய்க்கும் திமுகவினருக்குமான பஞ்சாயத்து..

விஜய்யின் வாரிசு படம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அந்த படத்துடன் சேர்த்து அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. இந்த படத்தின் தமிழக வினியோகிஸ்த உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இதையடுத்து, வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய குறைவான தியேட்டர்கள் வழங்கப்பட்டதாகவும், துணிவு படத்திற்கு அதிக தியேட்ர்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதிலிருந்தே, திமுகவினருக்கும் விஜய்க்கும் பஞ்சாயத்து என கூறப்படுகிறது. மேலும், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுக்காத விவகாரம், அப்படத்தின் வெற்றி விழாவிற்கு குறைவான ரசிகர் கூட்டத்தையே அழைத்த விவகாரம் என விஜய்யை குறி வைத்து பல விஷயங்கள் நடந்ததாம். இதை மனதில் வைத்து விஜய் இந்த விழாவை புறக்கணிப்பார் என கூறப்படுகிறது. 

விழாவில் பங்கேற்பவர்கள் யார் யார்? 

கலைஞர் நூற்றாண்டு விழா சுமார் 6 மணி நேரம் வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களும் முக்கிய நட்சத்திரங்களுமான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்கின்றனர். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக கலைஞர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முன்னணி நடிகர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News