திமுக தலைவர் கருணாநிதி பிறப்பால் போராளி என கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார்!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
Kalaignar M Karunanidhi is a born fighter. I am sure he will fight back and return fast to good health. Wish him a speedy recovery
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) July 28, 2018
"கலைஞர் கருணாநிதி பிற்பால் போராளி, அவர் நலம்பெற்று மீண்டுவந்து மீண்டும் போராட்டத்தில் இறங்குவார்" என பதிவிட்டுள்ளார்.