கர்நாடக வெற்றி கலங்கரை விளக்கம்... மக்கள் மாற்றத்துக்கு தயாராகிட்டாங்க - கனிமொழி ரியாக்ஷன்

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி என்பது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, இந்த முடிவு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக எதிரொலிக்கிறது என தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2023, 07:53 AM IST
  • கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி
  • காங்கிரஸ் கட்சிக்கு கனிமொழி வாழ்த்து
  • நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி எதிரொலிக்கும்
கர்நாடக வெற்றி கலங்கரை விளக்கம்... மக்கள் மாற்றத்துக்கு தயாராகிட்டாங்க - கனிமொழி ரியாக்ஷன் title=

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 13 ஆம் தேதியான சனிக்கிழமை காலை முதல் வெளியாக தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. குறிப்பாக பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. பாஜகவும் கணிசமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இறுதியில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதன் மூலம்  காங்கிரஸ் கட்சி மீண்டும் கர்நாடகாவில் அரியணையில் ஏறியிருக்கிறது. 

மேலும் படிக்க | Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!

கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு குமராசாமி ஆதரவுடன் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தபோதும், எம்எல்ஏக்கள் தாவல் காரணமாக ஆட்சி பீடத்தை இழந்தது. இதனை கருத்தில் கொண்டு பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து வலுவான வெற்றியை கர்நாடக மக்கள் கொடுக்க வேண்டும் என அக்கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் தேசிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்து அங்கேயே முகாமிட்டனர். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வாரம் இரண்டு மூன்று முறை அம்மாநிலத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை வழி பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

இதனை முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி பிரச்சார யுக்திகளை வகுத்தது. குறிப்பாக, சமூக ஊடங்கள் வழியாக பாஜகவின் பரப்புரைகளை விஞ்சும் வகையில் மக்கள் பிரச்சனைகள் சார்ந்து வீடியோக்களை உருவாக்கினர். இது கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கர்நாடக வாக்குப்பதிவிலும் எதிரொலிக்க இதுவரை இல்லாத அளவுக்கு கர்நாடகா காங்கிரஸ் கட்சி வாக்கு விழுக்காட்டை பெற்று இப்போது அரியணை ஏற இருக்கிறது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மண்ணில் இருந்து பாஜக முழுமையாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பில் ஏற இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக மகளிரணி தலைவியும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி என்பது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, இந்த முடிவு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக எதிரொலிக்கிறது என்றும் கூறினார்.  மேலும், கர்நாடக மாநிலத் தேர்தலில் பெற்றிருக்கும் அமோக வெற்றி நாளை நாடு முழுவதும் மாற்றத்திற்கான முன்னோட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | Rahul Gandhi: எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்... வெற்றி குஷியில் ராகுல் கூறியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News