அரசியல் வாழ்க்கை தாண்டி கலைஞரின் இலக்கிய துறை பணிகள்!

கலைஞரின் செங்கோல் ஆட்சியின் மீது பல விமர்சனம் எழுந்தாலும் இவரின் ஏழுகோளில் எப்போதும் தமிழை தவிர வெறும் ஏதும் இருந்தது இல்லை.    

Written by - ZEE TAMIL NEWS | Edited by - RK Spark | Last Updated : Jun 3, 2023, 11:27 AM IST
  • கருணாநிதி 15 நாவல்கள் எழுதியுள்ளார்.
  • மேலும் 15 சிறுகதைகள் எழுதியுள்ளார்.
  • படத்திற்கு திரைக்கதைகள் எழுதியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை தாண்டி கலைஞரின் இலக்கிய துறை பணிகள்! title=

அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முரசொலியில் அவர் எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவரும் தொடர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. இவரின் செங்கோல் ஆட்சியின் மீது பல விமர்சனம் எழுந்தாலும் இவரின் ஏழுகோளில்  எப்போதும் தமிழை தவிர வெறும் ஏதும் இருந்தது இல்லை.  “எனக்கு பள்ளியில் இடம் தரவில்லை என்றால் கமலாலயத்து தெப்பக் குளத்தில் விழுந்து இறந்து போய்விடுவான்” என்பதே டாக்டர் மு. கருணாநிதியின் முதல் போராட்ட முழக்கம். பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாடலுக்குத் தடை விதித்தது தஞ்சை மாவட்டக் கழகம்! அதனை எதிர்த்துக் கூட்டம் ஏற்பாடு செய்து விட்டார் பள்ளி மாணவரான கருணாநிதி.

மேலும் படிக்க | கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து! ஏன் தெரியுமா?

 

மாலை நேரத்தில் மாணவர்களை அழைத்துக்கொண்டு, வாருங்கள் எல்லோரும் செல்வோம்! வந்திருக்கும் ஹிந்தி பேய்யை விரட்டிடுவோம்…என்று கோஷம் போடும் தமிழ் உணர்வு கொண்ட 14  வயது சிறுவனாக தம் இலக்கிய வாழ்வை ஆரம்பித்தார். தன் 15ம் வயதில் மனவனேசன் என்ற கையெழுத்து பிரதி ஒன்றை நடத்தி வந்தார். தம் எழுத்துலக ஈடுபாட்டுத் தொடக்க காலமாக 1938 இலிருந்து 1942 வரையிலான காலத்தைக் கலைஞர் குறிப்பிடுகிறார். இலக்கிய விளைச்சலுக்கு விதைப்புக்கு காலமானது, திருவாரூர் வ.சோ. உயர் நிலைப் பள்ளியில் அவர் படித்த காலம்! 1942 அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு பத்திரிகையில் கலைஞர் எழுதிய இளமைப் பலி கட்டுரை வெளியாகி பெரும் வரவேட்பை பெற்றது.  அப்போது அவருக்கு வயது 18 தான், அந்த கட்டுரையை கையில் வைத்து கொண்டு ஊர் முழுக்க சுற்றி வந்துள்ளார். பாண்டிச்சேரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கருணாநிதி அதன் பின் தந்தை பெரியாரிடம் கொண்டு செல்லபட்டார். அங்கு  தந்தை பெரியாரின் கையால் மருந்து போட்டதில் கருணாநிதி மனம் நெகிழ்ந்துள்ளார்.  இதை தொடர்ந்து பெரியாரின் குடியரசு பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக ஒரு ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்றியுள்ளார்.  

கருணாநிதி 15 நாவல்கள் எழுதியுள்ளார். 15 சிறுகதைகள் எழுதியுள்ளார். வேகமாகப் படித்து முடிக்கக் கூடிய வடிவமான சிறுகதை வடிவம், பாரதியாரின், 'ஆறிலொருபங்கு' (1913) சிறுகதையிலுருந்து தமிழில் தொடங்குகிறது. வ.வெ.சு.அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்', தாகூர் கதையின் தழுவல் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால், முதற்படைப்பு எனும் பெருமையிலுருந்து விளக்கப் பட்டுவிட்டது. 'கிழவன் கனவு' கலைஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பாக 1945 இல் வெளிவந்தது. நாடும் நாகமும் (1953), தாய்மை (1956) கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் (1971) அடுத்தடுத்து வந்தவை. கடவுள் மறுப்பைப் பேசும் சிறுகதை 'கண்ணடக்கம்' கடித வடிவச் சிறுகதை 'நரியூர் நந்தியப்பன்' புராண எதிர்ப்பப் பேசுவது 'நளாயினி' மத நல்லிணக்கம் வலியுறுத்துவது 'அணில் குஞ்சு' இந்தி எதிர்ப்புக்கு காலகட்டத்தை விவரிப்பது 'சந்தனக் கிண்ணம்'. கலைஞர் கதை வசனம் மட்டும் பல பாடல்களையும் அல்லாது திரையிசைப் எழுதியுள்ளார். அவற்றில் தமிழுணர்ச்சி, சமுதாயக் கண்ணோட்டம், திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் மிளிர்வதைக் காணலாம்.

1947-ம் ஆண்டு வெளியான 'ராஜகுமாரி' திரைப்படம்தான், கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். எம்.ஜி.ஆர் நாயகன் வேடம் ஏற்று நடித்த முதல் திரைப்படமும் ‘ராஜகுமாரி’தான்.  கலைஞர் படைப்புகளும் இதே திசையில் புதிய கருத்துகளைக் காட்டின. முற்போக்கு உலகு நோக்கி அழைத்துச் செல்வதை நோக்கமாக்க கொண்டிருந்தன. புரட்சி இலக்கியம், முற்போக்குப் பார்வை, கார்க்கி என்பனவற்றை அறியாத எளிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும், கலைஞரின் முயற்சி எளிமை சார்ந்து இருப்பதில் வியப்பில்லை. முயற்சியை எளிமையாக்கிப் பார்த்து எள்ளும் பார்வையே வியப்பாய் இருக்கிறது. கலைஞரின் எழுத்துகளில் மடைதிறந்த வெள்ளமாய்ச் சொற்கள் பாய்ந்து வந்துவிழும்.  தமிழுணர்வை வளர்த்தல், பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்தை உருவாக்கல், தமிழ்ப் பண்பாட்டை மீட்டல், ஆரியப்பண்பாட்டை அகற்றல் முதலானவை திராவிடர் இயக்க எழுத்தின் மைய இழைகளாகத் திகழ்ந்தன.

மேலும் படிக்க | Kalaignar 100th Birthday: கல்லக்குடியிலிருந்து கல்லறைவரை; கருணாநிதியின் இடைவிடாத போராட்டம்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News