புதுடெல்லி: பல அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக தேவைப்படும் ஆதார் அட்டை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அடையாள நோக்கங்களுக்காக பல பொது மற்றும் தனியார் துறைகளால் இந்த ஆவணம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இதில் தனிப்பட்ட விவரங்கள் மட்டுமல்ல, தனிநபர்களின் பயோமெட்ரிக் தகவல்களையும் கொண்டுள்ளது. அதனால்தான், ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிறந்த தேதியை தேவைப்படும்போது புதுப்பிப்பது மிகவும் முக்கியம்.
ஆதார் அட்டையில் ஏற்படும் மாற்றங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கையாளுகிறது. இருப்பினும், UIDAI, 2019 ஆம் ஆண்டில், ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பதற்கான வரம்பு உள்ளதாக அறிவித்தது.
ஆதார் அட்டைதாரர்கள் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களில் மாற்றங்களைச் செய்யலாம். எனினும் சில மாற்றங்கள் செய்ய அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். UIDAI ஆனது ஆவணத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு அட்டைதாரர்களிடமிருந்து சிறிய கட்டணத்தையும் வசூலிக்கிறது. இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் சில மாற்றங்களை சில முறை மட்டுமே செய்ய முடியும்.
ALSO READ | ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!!
ஆதார் அட்டையில் உங்கள் பெயரை எத்தனை முறை புதுப்பிக்கலாம்?
UIDAI, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் தங்கள் பெயர்களை அதிகபட்சம் இரண்டு முறை மாற்றலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் அட்டையில் உங்கள் பிறந்த தேதியை எத்தனை முறை புதுப்பிக்கலாம்?
பிறந்த தேதிக்கு, UIDAI இன்னும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும். மேலும், அவர்கள் பிறந்த ஆண்டை ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியின் அதிகபட்ச மூன்று ஆண்டுகள் என்ற அளவிற்கு மட்டுமே அதிகமாகவோ, குறைவாகவோ மாற்றலாம்.
ஆதார் அட்டையில் உங்கள் பாலின விபரத்தை எத்தனை முறை புதுப்பிக்கலாம்?
பிறந்த தேதி மாற்றம் தொடர்பான விதிகளைப் போலவே, அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் பாலினத்தை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும், UIDAI இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதன் குறிப்பைக் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சில விதிவிலக்குகளின் அடிப்படையில், UIDAI அனுமதித்த அதிகபட்ச எண்ணிக்கையை தாண்டி ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி அல்லது பாலினத்தை அட்டைதாரர்கள் மாற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Ration Card: நீக்கப்பட்ட பெயரை சேர்ப்பது எப்படி ..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR