265 மேஜைகள்... 321 சுற்றுகள்... சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் விபரம்..!!

சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை மொத்தம் 265 மேஜைகள் மூலம் 321 சுற்றுகளாக எண்ணப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2024, 02:55 PM IST
  • சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று மக்களவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை.
  • தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்படும்.
265 மேஜைகள்... 321 சுற்றுகள்... சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் விபரம்..!! title=

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள  வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய இருக்கும்  மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தற்போது துவக்கி வைத்தார். 

பின்னர் மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது...

நாடாளுமன்ற தேர்தலுக்கான (Lok Sabha Elections) வாக்குப்பதிவு ஜூன் நான்காம் தேதி துவங்க உள்ள நிலையில் வாக்கு என்னும் மையங்களில் பணிபுரிய உள்ள நுண்பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் உதவியாளர்கள் உதவி அலுவலர்கள் ஆகியோர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று மக்களவை தொகுதிகளையும் சேர்த்து 357 நுன் பார்வையாளர்கள், 374  மேற்பார்வையாளர்கள்,  322 அலுவல உதவியாளர்கள், 380 உதவியாளர்கள் என மொத்தமாக 1433 பேர் பணிகள் ஈடுபட உள்ளனர். மேலும் 47 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். சென்னையில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தமாக 922 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

மேலும் படிக்க | ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்!

 வடசென்னையில் சட்டமன்ற தொகுதிவாரியாக 14 மேஜைகள், மத்திய சென்னையில் 14 மேஜைகள், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 265 மேஜைகள் மூலம் மூன்று நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது 

வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்படும். சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படும்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா, தபால்  வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஆனால் தபால் வாக்குகளின் முடிவுகள் இறுதியில் தான் வெளியிடப்படும் என
தெரிவித்தார்.

மேலும் படிக்க | திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News