பாஜகவுடன் இதனால் தான் கூட்டணி சேரவில்லை - ஓப்பனாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி!

மத்தியில் உள்ளவர்களிடம் கூட்டு வைத்தால் அவர்கள் கொண்டுவரும் தமிழகத்திற்கு விரோதமான சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2024, 08:16 AM IST
  • பெண்களை இழிவுபடுத்தி பேசுவது திமுக.
  • பெண்களை தெய்வமாக மதிப்பது அதிமுக.
  • வேலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
பாஜகவுடன் இதனால் தான் கூட்டணி சேரவில்லை - ஓப்பனாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி! title=

தற்போது அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய கூட்டத்தில் மு க ஸ்டாலின் புகார் பெட்டியை வைத்து மனுக்களை வாங்கி சென்றார். ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சாவியை தொலைத்துவிட்டார் போல எனக் கூறி அது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை காட்டி எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து கந்தனேரியில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில்,  அதிமுகவால் அடையாளம் காணப்பட்டவர் நம்மை எதிர்த்து இங்கு போட்டியிடுகிறார். இன்று நம்மை துரோகி என்றும் முதுகில் குத்தியதாகவும் பேசுகிறார். 

மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!

என்றைக்கும் அதிமுக துரோகம் செய்தது கிடையாது. ஆகவே நன்றி மறக்க வேண்டாம். 2019 ல் நம்மோடு கூட்டணி வைத்ததால் நமது கழகத்தினர் கடுமையாக உழைத்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். எண்ணம் சராயில்லை அதனால் தோல்வியடைந்தீர்கள் என தற்போது பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிக்கட்சி தலைவர் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுட்டிக்காட்டி பேசினார். நிச்சயம் வேலூரில் அதிமுக வெற்றி பெறும். வேலூரில் மும்முனை போட்டி நடக்கிறது அதில் முன்னனியில் இருப்பவர் நமது வேட்பாளர். திமுகவை சேர்ந்த வேலூர் வேட்பாளர் பெண்களை பார்த்து அவதுராக பேசுகிறார். பவுடர் போட்டியா? பேரன் லவ்லி போட்டியா பளபளனு இருக்கே என பேசுகிறார் அது என்ன உன் வீட்டு பணமா? இன்னொரு அமைச்சர் ஓசி பஸ் என பேசுகிறார்.

பெண்களை இழிவுபடுத்தி பேசுவது திமுக. பெண்களை தெய்வமாக மதிப்பது அதிமுக. இந்த தேரதலில் பெண்கள் சரியான ஆப்பு கொடுக்க போராங்க. பெண்களுக்கான மகளிர் உதவித் தொகையை அனைவருக்கும் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு தற்போது 75 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். ஆனால் வெளியில் ஒரு கோடி பேருக்கு மேல் கொடுக்கிறோம் என பொய் சொல்கிறார்கள். ஸ்டாலின் எப்பவுமே டீ குடித்ததே கிடையாது போல தேர்தல் வாக்கிக் போகும் போது தான் டீ கடையே பாக்குறார். அப்போது பெண் மணி ஒருவர் எனக்கு ஆயிரம் வரலை என கேட்டதுதத்து. தகுதி இல்லை என்றார். இன்று கேள்வி கேட்ட தொடங்கிவிட்டார்கள். மக்கள் இன்றைக்கு விழித்துக்கொண்டார்கள் ஸ்டாலின் அவர்களே.

இன்றைக்கு உதார் உதயநிதி வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் கீழ்தரமாக, அவதுராக பேசுகிறார்.  இன்றைக்கு போதை பொருள் கூடாரமாக திமுக உள்ளது. இன்று கஞ்சா போதை பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. "மக்கள் வெறுக்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது" பள்ளி கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்லதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. மடிக்கணிணி திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியது திமுக அரசு. அன்று மாணவர் மடியில் மடிக்கணிணி விளையாடியது, இன்றைக்கு திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். வேலூர் மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் கொடுக்கும் ஒரே அரசு திமுக தான். சமூகவிரோதிகள் அதிகமாகியுள்ளனர். அதிமுக கொண்டு வந்த 7.5% இட ஒதுக்கீட்டால் 2170 பேர் மருத்துவம் படிக்கிறார்கள். தாலிக்கு தங்கம் கொடுத்தோம் நாம். அது உங்களை என்னப்பா பண்ணது அதையும் தடை பண்ணிட்டிங்க. எங்கு பார்த்தலும் கொலை கொள்ளை கற்பழிப்பு நடக்கும் அலங்கோல ஆட்சி நடக்கிறது என்று பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் படிக்க | அதானிக்காக இலங்கையிடம் பேசிய மோடியே மீனவர்களுக்காக பேசுனீங்களா? உதயநிதியின் 11 கேள்விகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News