Liver Damage: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியமாகும். சில உறுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவற்றில் கல்லீரலும் ஒன்று. இதை பழுதடையாமல் பாதுகாப்பாக வைப்பது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் நமக்கு அதற்கான சில அறிகுறிகளை அளிக்கின்றது. கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் ரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும். கல்லீரல் உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது முக்கியமாக நச்சுகளை உடலிலிருந்து வெளியேற்றுவது. செரிமானத்தை சீராக பராமரிப்பது, ஆற்றலை சேமிப்பது உள்ளிட்ட பல பணிகளை கல்லீரல் செய்கின்றது.
எனினும், மோசமான வாழ்க்கை முறை, அதிகப்படியான மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பிற வெளிப்புற காரணங்களால் கல்லீரலில் அழுத்தம் ஏற்படுவதால், அது சேதமடைகிறது. பழுதடைந்த கல்லீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உணவில் சில சிறப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டும். சில இயற்கையான வழிகளில் இதை செய்யலாம். கல்லீரலை இயற்கையாக சரிசெய்ய உதவும் 5 உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளன. இவை கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகின்றன. இது கல்லீரலில் சேரும் அழுக்குகளை அகற்றி உடலில் உள்ள நச்சுகளை நீக்குகின்றது. எலுமிச்சையை உட்கொள்வது கல்லீரல் நொதிகளை செயல்படுத்துவதற்கும் அவை புத்துயிர் பெறுவதற்கும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது கல்லீரலுக்கு நன்மை பயக்கும்.
மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் அவற்றுக்கு புத்துயிர் அளிக்கவும் உதவுகிறது. மஞ்சளில் இயற்கையான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலுக்கு நன்மை பயக்கும். இது கல்லீரலில் இருந்து நச்சுகளை அகற்றி அதன் செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | சக்கரவள்ளி கிழங்கு: குளிர்கால செரிமான பிரச்சனைகளுக்கு 5 அற்புத நன்மைகள்!
கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் தாவர ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கக்கூடியவை. இந்த இரண்டு கூறுகளும் கல்லீரலின் செயல்பாட்டை எளிதாக்குகின்றன. மேலும், நச்சுகளால் கல்லீரலில் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றன. இதனால் கல்லீரல் நோய்களில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கின்றது.
கீரை
கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. கீரை செரிமானத்தை மேம்படுத்தவும் கல்லீரல் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் பீடைன் எனப்படும் ஒரு தனிமம் உள்ளது. இது கல்லீரல் பாதிப்பை சரிசெய்து அதில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. பீட்ரூட்டை தினமும் சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பது கல்லீரலை விரைவில் சரிசெய்ய உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ