தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: பழனிசாமி..!

வேலூர் மக்களவை தேர்தல் முடிவை அதிமுகவின் வெற்றியாகவே கருதுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Aug 10, 2019, 01:19 PM IST
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: பழனிசாமி..! title=

வேலூர் மக்களவை தேர்தல் முடிவை அதிமுகவின் வெற்றியாகவே கருதுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

பூங்காவில் புலிகள் வாழும் காடு வளமானது என்பது அறிவியல்பூர்வமான கருத்து அந்த வகையில் அழிந்து வரும் புலி இனத்தை காப்பதற்கு அனைத்து சமூக ஆர்வலரும் அக்கரை காட்டி வரும் சூழலில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் பூங்காவில் நான்கு புலிக்குட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் பெயரிட்டுள்ளார். 

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மக்களவை தேர்தலில் 3 சட்டமன்ற தொகுதியில் 3 தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும், இது அதிமுகவிற்கு கிடைத்த மிப்பெரிய வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்தார். 
 
மேலும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் எனவும் கூறினார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், அங்கு அமைச்சர் உதயக்குமார் தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

 

Trending News