ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 12, 2024, 08:38 PM IST
  • தனிப்பட்ட முறையில் ஆபாச படம் பார்த்தால் குற்றமில்லை
  • மற்றவர்களுக்கு ஆபாச படங்களை பகிர்ந்தால் குற்றம்
  • சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றம் title=

சென்னையை அடுத்த அபம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் போக்சோ சட்டம் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க | Pongal: ரயில் டிக்கெட் புக் பண்ண வேண்டாம்..! ஹேப்பியா ஊருக்கு போய்டு சென்னை வாங்க.!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட இளைஞரை ஆஜராகச் சொல்லி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை எனவும், ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல என்றும், அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக் கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறிய நீதிபதி, இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும் எனவும், பள்ளிகளில் இருந்து இதுசம்பந்தமாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்து தரவுகளையும் எந்த தணிக்கையும் இல்லாமல் பெற வகை செய்யும் மொபைல் போன்ற தொழில்நுட்பங்களால் இன்றைய இளம் தலைமுறையினர் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக கூறிய நீதிபதி, ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அத்ற்கு அடிமையாகி விடுகின்றனர் என கவலை தெரிவித்துள்ளார். 10ல் ஒன்பது சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் என சொல்லக்கூடிய பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கபடுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | எங்கள் உடலில் இருப்பது அதிமுக ரத்தம் - ஓ.பன்னீர்செல்வம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News