2026இல் தான் மதுரை எய்ம்ஸ் வேலை முடியுமா? மத்திய அமைச்சரின் தகவல் கொடுக்கும் கவலை

Madurai AIIMS Update: 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2022, 03:59 PM IST
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடைவது எப்போது?
  • சூசகமாய் பதிலளித்த மத்திய அமைச்சர்
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் கருத்து
2026இல் தான் மதுரை எய்ம்ஸ் வேலை முடியுமா? மத்திய அமைச்சரின் தகவல் கொடுக்கும் கவலை title=

தர்மபுரி: 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் "தமிழ்நாடு பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம். மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தியதாக தெரிவித்த மத்திய அமைச்சர், நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் செயலாற்றி வருகிறார் என்று குறிப்பிட்டார். தருமபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு 58 கோடி ரூபாய் வழங்கி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் நிவாரண பணிகளுக்காக தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. சுகாதாரத் துறையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட மக்கள் இத்திட்டங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகளில் பிரதம மந்திரி தேசிய ரத்த சுத்திகரிப்பு  திட்ட மூலம் ரத்தம் சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் தொடர்பான அடையாள அட்டைகள் ஆறு லட்சம் பேருக்கு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டுக்கு தேசிய சுகாதார திட்டத்திற்காக மத்திய அரசு 3,226 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சுகாதார துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு நிதியில் ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் தமிழக அரசு வெளியிடுவதில்லை. சுகாதார திட்டங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்படும் விளம்பரங்களில் தமிழ்நாட்டுக்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒரு திட்டத்தில் கூட பிரதமர் படமும், மத்திய அரசு சின்னங்களும் வெளியிடப்படவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் குறை கூறினார்.

மேலும் படிக்க | முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறார்கள்! அசாதுதின் ஓவைசி

இதேபோன்று தருமபுரி மாவட்டத்திற்கும் இந்த விழிப்புணர்வு பணிக்காக 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இங்கு வந்து பார்த்தாலும் அந்த விழிப்புணர்வு விளம்பரங்களில் மத்திய அரசு நிதி என்றும் குறிப்பிடப்படவில்லை, பாரத பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் அலுவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கோவிட் தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு,  தற்போது 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்த புள்ளி பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பிஎஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  2026 ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும். என அமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார்.

பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; 6 பாகிஸ்தானியர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News