மணப்பாடு படகு விபத்து: 10 பேர் பலி

Last Updated : Feb 27, 2017, 09:42 AM IST
மணப்பாடு படகு விபத்து: 10 பேர் பலி  title=

தூத்துக்குடி மாவட்டம் திருச்சசெந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு நேற்று விபத்திற்குள்ளானது. 

இதில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். இந்த படகில், 10 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. அப்பகுதி மீனவர்கள் படகுகளிலும், கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் விமானம் மூலம் தேடுதலில் ஈடுபட்டனர். இதனால் இந்த படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.

Trending News