10 -12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ்

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 25, 2022, 02:13 PM IST
10 -12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் title=

சென்னை: நாட்டில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்தது. மேலும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, முந்தை தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து இந்த ஆண்டு நேரடி 10 ம்,மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்தும், அந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் எனக் கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதியான நிலையில், இன்று இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு

அதில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு தொடங்கி நடைபெறும் மற்றும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறுமா? அல்லது மாற்றம் செய்யப்படுமா? என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

முன்னதாக தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அன்பில் மகேஷ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News