குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் -அமைச்சர் ஜெயக்குமார்!

துணை முதல்வர் பன்னீர் செல்வம் குறித்து குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 25, 2019, 11:05 AM IST
குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் -அமைச்சர் ஜெயக்குமார்! title=

துணை முதல்வர் பன்னீர் செல்வம் குறித்து குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து தெரிவிக்கையில்., ‘ஆடிட்டர் குருமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் மாற்று என கூறியது அவரது தனிப்பட்ட கருத்து’ என குறிப்பிட்டார்.

மேலும், “கடந்த 15 நாட்களாக முதல்வரும், நாங்களும் இதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளோம். MGR மற்றும் ஜெயலலிதா சினிமாத் துறையில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள் அரசியலில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள்.

இவர்கள் எல்லாம் திரைப்பட துறையில் நட்சத்திரங்களாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பொருத்தவரை ஜொலிக்காத நட்சத்திரங்கள் தான். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அவர் வாக்கு வங்கி என்னவென்று தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த் அவர்களும் கட்சி ஆரமிக்கும் பொழுது அதே நிலைமைதான் வருங்காலத்தில் அவருக்கும் ஏற்படும்” என்று ஜெயகுமார் தெரிவிதார்.

தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தம் பற்றிய விமர்சனத்திற்கு பதிலலித்த அவர், “இது ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம், இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சந்தர்ப்பங்களில் அதிமுகவின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால் தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்” என்று தெரிவித்தார.

2021 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, “வீணாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள். உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக., திருச்சியில் துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்த பொழுது ஓ.பன்னீர் செல்வம் தன்னிடம் வந்தார் எனவும், இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்ன பொழுது அவரிடம் நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன்’என்று தெரிவித்தார். குருமூர்த்தியின் இந்த கருத்து தற்போது அதிமுக கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News