பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்

பள்ளிகள் திறக்கும் வரை அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 20, 2020, 06:22 PM IST
பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் title=

சென்னை: கொரோனா (Coronavirus) பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறக்கும் வரை அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அறிவித்துள்ளது. 

அதாவது கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி (TN School) , கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் நலன் கருதி, தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளியில் படித்து வந்த மாணவ-மாணவிகளுக்கு அரிசி மற்றும் பருப்பு ஆகிய  உலர் உணவுப் பொருட்களை வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிகக்கி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம்; அடுத்த மாதம் தான் புத்தகம் கிடைக்கும்: கல்வி அமைச்சர்

No description available.

No description available.

Trending News