தருமபுரி: 15 வயது சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்த கிருஷ்ணா, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 22, 2022, 05:51 PM IST

Trending Photos

தருமபுரி: 15 வயது சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது title=

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் சிறுமி ஒருவருக்கு அடுத்தடுத்து நடந்துள்ள கொடுமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
ஒகேனக்கல் பகுதியை சேர்ந்தவர் 15 வயதான கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

எட்டாம் வகுப்பு வரை படித்த இந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு  கனகபுராவை சேர்ந்த சிறுமியின் தாய் மாமன் 27 வயதான கிருஷ்ணாவுக்கு இவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

தாய் மாமனுடன் தனக்கு ஒத்துப்போகாததால், சிறுமியின் மன முதிர்ச்சியும் மிகவும் குறைவாக இருந்ததால், சில மாதங்களில் சிறுமி மீண்டும் தன்னுடைய சொந்த ஊரான ஒகேனக்கலுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு ராணிப்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவருடைய 23 வயதான செல்வன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

இந்த உறவின் விளைவால் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான சைல்டு லைன் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சிறுமியை திருமணம் செய்த கிருஷ்ணா, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் (TN Police) போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ALSO READ | வேலூர்; எருதுவிடும் விழாவில் சோகம் - எருது முட்டிய சிறுமி உயிரிழப்பு

ALSO READ | போலீசாரைக் கண்டித்து பாஜக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

ALSO READ | Leopard Hunt: 5 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது! சிக்கியது சிறுத்தை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News