தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. இதற்கு நன்றி சொல்லும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு மற்றும் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், நாளை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாமரை தமிழ்நாட்டில் மலரும் என கூறியவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 தமிழக தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி முகம்! வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதிகளையும் சேர்த்து 40க்கு 40 என்ற பிரம்மாண்ட வெற்றியை அளித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. இந்த பிரமாண்ட வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். பா.ஜ.கவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலைகள் உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவில் ரீதியான தாக்குதலை பாஜக மேற்கொண்டது. வெறுப்பு பிரச்சாரத்தால் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட அராஜகங்களையும் மீறி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறேன்." என்றார்.
பிரதமர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி இதே கேள்விக்கு முன்பொருமுறை கூறிய என் உயரம் எனக்கு தெரியும் என்று பதில் அளித்தார். மேலும், இந்த கேள்விக்கு ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்துவிட்டதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ