தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் ஜாக்கிரதை - அமைச்சரை எச்சரித்த முதலமைச்சர்

தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் பேசியிருக்கிறார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 18, 2022, 01:52 PM IST
  • அமைச்சர் நாசர் மகனின் திருமணம் நடந்தது
  • முதலமைச்சர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்
  • திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் ஜாக்கிரதை - அமைச்சரை எச்சரித்த முதலமைச்சர் title=

பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் திருமணம் திருவேற்காடு அருகே நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்திற்கு முதலமைச்சர் தலைமை தாங்கினார். அமைச்சர் நாசரும், அவரது மனைவியும் முதலமைச்சருக்கும், துர்கா ஸ்டாலினுக்கு மரியாதை செய்தனர். இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம். அவ்வாறு நடத்தினால் சிலர் விமர்சிப்பார்கள். நாம் தும்மினால் கூட விமர்சிக்க சிலர் தயாராக இருக்கிறார்கள் என கூறியிருந்தேன். நான் கூறியபடி அவரும் தனது மகன் திருமணத்தை எளிமையாகவே நடத்தியுள்ளார்.

பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் நாசர், ஆவின் நிறுவனத்தில் செய்யும் ஆய்வுகளை பார்த்துள்ளேன். உணவு பொருளில் முடி விழக் கூடாது என்பதற்காக போடப்படும் தொப்பியை போட்டுக் கொண்டு ஆய்வு பணிகளை அவர் மேற்கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அமைச்சர் நாசரின் உழைப்புதான். ஆவின் நிறுவனத்தோடு அவரது உழைப்பு நின்றுவிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆவடியை சேர்ந்த டான்யா என்ற மாணவி முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் தன்னை பள்ளியில் ஒதுக்கி வைப்பதாகவும் தனது படிப்பு பாழாவதாகவும் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதை பார்த்ததும் மன வேதனை அடைந்த நான் உடனே அமைச்சர் நாசரை அழைத்தேன். அந்த மாணவிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றேன். உடனே சிறுமியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் நாசர், விவரங்களை கேட்டறிந்தார்

பின்னர் சவிதா மருத்துவமனையே இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாக அறிவித்த நிலையில் அந்த அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி வீடு திரும்பும் வரை அமைச்சர் நாசர் உடனிருந்து கவனித்து கொண்டார். தற்போது அந்த குழந்தை பள்ளிக்குச் சென்று வருகிறார். ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது. ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர்” என்றார்.

மேலும் படிக்க | உதயநிதி வாரிசா? துணிவா?... கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன நச் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News