நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்!
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மக்களுக்கு உறுதி அளித்தார்.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 40-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
Smt @nsitharaman arrives at Kodiyakkarai to assess the effects of Cyclone Gaja on coastal Tamil Nadu. She is received by senior Ministers of the state government and locals who brief her of the situation. pic.twitter.com/0MjvOLgpTq
— Raksha Mantri (@DefenceMinIndia) November 29, 2018
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 'கஜா' புயல் தாக்கம் அதிகம் இருந்தபோதிலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களி கஜா பாதிப்பு மிகஅதிகமாக இருந்தது.
இதன் காரணமாக கடந்த 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டனர், இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். எனவே நேற்றைய தினம் நாகை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.