பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 16, 2023, 01:47 PM IST
  • பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர்.
  • அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராயப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
  • அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் உள்ள கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல் title=

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில் "பப்ளிக் போலீஸ்" என்ற தன்னார்வ அமைப்பின் கருத்தரங்கம்  நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

"பப்ளிக் போலீஸ்" என்னும் தன்னார்வ அமைப்பு சட்ட உரிமை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல், குற்றம், சாதிய வேறுபாடுகளை களைவதற்கான நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளை வைரஸ் தொற்று காரணமாக மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை எனவும் வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத் துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என கூறினார். 

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் உள்ள கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு..காரணம் இதுதானா?

மேலும், அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளதாகவும் இப்போது வரை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களால் தமிழ் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சரின் இந்த கூற்று அவர்களுக்கு உறுதியான எந்த தெளிவையும் அளிக்கவில்லை என்றே கூறவேண்டும். இருப்பினும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் வாழ்வில் மிக முக்கியமான கட்டம் என்பதால் அரசு, மாணவர்களுக்கு சாதகமான ஒரு முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

மேலும் படிக்க | தமிழகத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? அமைச்சர் மா.சு. விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News