தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்வு...!

Updated: Apr 29, 2020, 07:46 PM IST
தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்வு...!

தமிழகத்தில் இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2162 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 82 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 1210 பேர் குணமடைந்து உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் செங்கல்பட்டில் 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 

திருவள்ளூரில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் திருவள்ளூரில் மொத்தம் 54 பேருக்கு கொரோனா உள்ளது. விழுப்புரத்தில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் விழுப்புரத்தில் 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையம் 41ல் இருந்து 44 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 8087 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை செய்யப்பட கொரோனா சோதனைகளில் இன்று தான் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 109961 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்கத்தில் இதுவரை 101075 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 7886 நபர்களுக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் இன்று யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

இதனால் கிருஷ்ணகிரி எப்போதும் போல கிரீன் சோன் பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1455 ஆண்கள் மற்றும் 707 பெண்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 922 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 129 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று வந்த வழக்குகளில் பலருக்கு கொரோனா எப்படி வந்தது என்று தெரியவில்லை.