நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் மகன் விருப்பம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டி?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2019, 01:55 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் மகன் விருப்பம் title=

அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து வரும் 10-ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படுகிறது என நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறி விருப்ப மனுவை வாங்கி உள்ளார். 

இதுகுறித்து அவர், நான் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். ஒவ்வொரு பொறுப்பையும் நன்றாக வழிநடத்தி படிப்படியாக முன்னேறி வந்துள்ளேன். இது அனைவருக்கும் தெரியும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடப்போவதாக வீட்டில் கூறினேன். அவர்களின் ஒப்புதல் கிடைத்ததால், விருப்ப மனுவை வாங்கி வந்துள்ளேன். நான் தேர்தலில் போட்டியிடுவதும் கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு தான் செயல்படுவேன் எனக் கூறினார்.

மேலும் வரும் 8-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, பிரச்சார வியூகங்கள், தேர்தல் பணிகள் வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள முகவர்களை இறுதி செய்தும் மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News