தமிழக அரசு சார்பில் “விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் மற்றும் மாற்று எரிசக்தி” குறித்து ஒருநாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வெளிடப்படுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.in) (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும் தொழில் முனைவோர்களுக்காக, “விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் மற்றும் மாற்று எரிசக்தி” குறித்து ஒருநாள் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் 19.11.2019 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 நடைபெற உள்ளதால், தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்கள், வருகை தந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்.
---முன் பதிவு அவசியம்---
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ
தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
8668102600, 9444557654 (www.editn.in)